சிற்றிதழ் அறிமுகம்: ‘சொற்கள்’ - கவிதைக்கான காலாண்டிதழ்

சிற்றிதழ் அறிமுகம்: ‘சொற்கள்’ - கவிதைக்கான காலாண்டிதழ்
Updated on
1 min read

கவிதைகளுக்கென பிரத்யேகமாக ‘சொற்கள்’ இதழைக் கொண்டுவருகிறார் கே.சி.செந்தில்குமார். அதன் மூன்றாம் இதழ் வெளிவந்திருக்கிறது.

13 கவிஞர்களின் நேரடி தமிழ்க் கவிதைகளோடு, செர்பியக் கவிஞர் வாஸ்கோ போப்பா, அர்மீனியக் கவிஞர் அவெட்டிக் ஐஸாஹாக்கியன் ஆகியோரது கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

கவிதைத் தொகுப்புகளுக்கான விரிவான மதிப்புரைகளும், ‘எஸ்ரா பவுண்டும் படிமவியல் இயக்கம்’ என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை.

சொற்கள்
2-வது அக்ரஹாரம்,
சேலம்-636001.
விலை: ரூ.75
95666 51567

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in