சிற்றிதழ் அறிமுகம்: ‘சாசனம்’ - தொல்லியலுக்காகத் தனி ஆய்விதழ்

சிற்றிதழ் அறிமுகம்: ‘சாசனம்’ - தொல்லியலுக்காகத் தனி ஆய்விதழ்
Updated on
1 min read

கீழடி அகழாய்வு முடிவுகள், தமிழில் தொல்வரலாறு குறித்த ஆய்வுகளில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தொல்லியல் தொடர்பாகப் புத்தகங்களும் கட்டுரைகளும் அதிக அளவில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. தமிழில் தொல்லியல் தொடர்பான நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம், அடுத்து ‘சாசனம்’ என்ற ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் ஆய்விதழைத் தொடங்கியிருக்கிறது.

இவ்விதழில் தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் தொல்லியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகும். கட்டுரைகளோடு உயர்தரமான காகிதத்தில் தொல்லியல் சார்ந்த வண்ணப் படங்களும் இடம்பெற்றிருப்பது இவ்விதழின் சிறப்பு.

சாசனம்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம்
ஓசூர்- 635109
ஆண்டு சந்தா: ரூ.450
98426 47101

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in