

தொழிற்சங்கவாதியான வி.முத்தையா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய காக்கைச் சிறகினிலே, ஜனவரியில் 100-வது இதழாக மலர்ந்திருக்கிறது.
இதழுக்குப் பங்களித்துவரும் அனைவருக்கும் நன்றிசொல்லி வி.முத்தையா எழுதியிருக்கும் கட்டுரை, அச்சகத்திலிருந்து இதழ்களை அலுவலகத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஆட்டோ ஓட்டுநர் ரவியிலிருந்து தொடங்குவதுதான் அவரின் சிறப்பு.
தொ.பரமசிவன், க.பங்சாங்கம், ந.முத்துமோகன், அ.கா.பெருமாள், தி.சு.நடராசன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் முக்கியக் கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
காக்கைச் சிறகினிலே
திருவல்லிக்கேணி, சென்னை-5.
விலை: ரூ.25
98414 57503