Published : 21 Dec 2019 08:35 AM
Last Updated : 21 Dec 2019 08:35 AM

360: தூரிகையின் தோழனாகும் ‘கோடு’

புதுச்சேரியில் புத்தகத் திருவிழா

புதுச்சேரியில் 23-வது தேசிய புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திருவிழாவைத் தொடங்கிவைத்தார். வள்ளலார் சாலையிலுள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நேற்று (டிசம்பர் 20) தொடங்கிய புத்தகக்காட்சி, டிசம்பர் 29 வரை நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ அரங்கு எண்: 32

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய விருதுகள்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் வழங்கும் 2019-க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தெ.ஞானசுந்தரம் (உ.வே.சா. தமிழறிஞர் விருது), இமையம் (பெரியசாமித் தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது), செ.இராசு (டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருது), ராம் மோகன் (தனிநாயக அடிகள் அயலகத் தமிழ் விருது) ஆகியோருடன் க.ரத்தினம், பெ.சுப்பிரமணியன், இரா.முத்துநாகு ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை அசோக் நகரில் புத்தகக்காட்சி

மார்கழி மாதம் முழுவதும் சென்னை அசோக் நகரின் முதல் அவென்யூவிலுள்ள பாம்பன் ஸ்டோரில் புத்தகக்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 10% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். தொடர்புக்கு: 90876 61110.

தூரிகையின் தோழனாகும் ‘கோடு’

ஒவ்வொரு ஓவியருக்கும் தான் வரைந்த ஓவியங்களை ஓவியக் கண்காட்சியாக மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது பெரும் கனவாகும். சென்னை மாநகரில் ஓவியக் கண்காட்சி நடத்த ஆர்ட் கேலரிகள் நிறைய உள்ளன. ஆனால், இவற்றுக்கான வாடகையைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும். இந்நிலையில், மிகக் குறைந்த செலவில் தங்கள் ஓவியக் கண்காட்சியை நடத்தும் வகையில் வேளச்சேரியில் ‘கோடு’ ஓவியக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார் சீராளன் ஜெயந்தன். வேளச்சேரி – விஜயநகரப் பேருந்து நிலையத்திலிருந்து அழைக்கும் தூரத்தில் அமைந்துள்ளது ‘கோடு’ ஓவியக்கூடம். சீராளனை அணுக: 99622 44554

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x