

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
பாமயன்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ரூ.190
தொடர்புக்கு: 74012 96562
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல் இயற்கையோடு இயைந்து வேளாண்மையை மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் பரவலாகிவருகின்றன. ஆனால், இதற்கு வழிகாட்டும் முழுமையான களக் கையேடு நம்மிடம் இல்லை. அதை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது பாமயனின் இந்நூல். ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ பகுதியில் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாகக் காரணமாக இருந்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’போல இந்த நூலும் பயன்படும்.