

சாதனை அதிபதி
லாயர்
எஸ்.லட்சுமணன்
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
ராயப்பேட்டை, சென்னை-14
விலை: ரூ.120
சிறு வயதிலேயே வாழ்க்கையின் எதிர்நீச்சலில் வென்று, சட்டம் பயின்று, வழக்கறிஞர் என்ற லட்சிய அந்தஸ்தை அடைந்ததையும், பின்னர் பல வழக்குகளைத் தன் நுண்ணறிவால் எப்படி வென்றார் என்பதையும் சொல்கிறது ‘சாதனை அதிபதி’ என்ற இந்த லட்சுமணனின் சுயசரிதை நூல்.
மகாத்மா காந்தி
(150 ஆண்டு நிறைவின் நினைவு)
ச.சுப்ரமணியன்
வேங்கிக்கால்
திருவண்ணாமலை
விலை: ரூ.30
9994829240
மகாத்மா காந்தியின் வரலாறு மனித மனங்களைத் தூய்மைப்படுத்தும் ரசவாதம் கொண்டது. அத்தகு இந்நூல் எல்லோரையும் செம்மைப்படுத்தும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு உரமிடவும், அவர்களை மேன்மைப்படுத்தவும் அவர்களிடம் நல்ல சிந்தனைகளைத் தூண்டவும் பேருதவிபுரியும்.
தமிழ்நாடு தொழில் முனைவோர்களின்
முழுமையான கையேடு
(தொழில் முன்னேற்ற வழிகாட்டி மலர்)
ஏஜேஎம் பவுண்டேஷன் வெளியீடு
ராயப்பேட்டை, சென்னை-14
விலை: ரூ.200
9381034935
மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வேலைக்கு உரிய பல போட்டித் தேர்வுகள், தொழில் நுணுக்கப் பயிற்சி தரும் நிறுவன விவரங்கள் எனப் பல தகவல்களை உள்ளடக்கியதாக இந்த மலரை வெளியிட்டுள்ளார்கள்.
முரல் நீங்கிய புறா
சம்பத்ஜி
புது எழுத்து வெளியீடு
அண்ணா நகர், காவேரிப்பட்டினம்.
விலை: ரூ.120
98426 47101
வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஒரு மாயத்தன்மையும் ஒரு பிரபஞ்ச ரகசியமும் நம்மைக் கடந்தபடியேதான் இருக்கிறது. அதை உற்று அவதானித்து மொழிக்குள் அடைத்துவைக்கிற மந்திரத்தைக் கவிதை எனலாம். அப்படியான கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.