Published : 30 Nov 2019 11:34 AM
Last Updated : 30 Nov 2019 11:34 AM

நூல்நோக்கு: கதாபாத்திரங்களின் கதைகள்

திரைப்படங்கள் காலத்தால் மறக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து சில கதாபாத்திரங்கள் மட்டும் எப்போதும் மனதோடு ஒன்றியிருக்கும். சில நேரங்களில் திரையில் தோன்றும் மனிதர்கள் கற்பனையில் நண்பர்களாகிறார்கள், சில நேரங்களில் தங்களது வாழ்க்கையைச் சீர்படுத்திக்கொள்ள உதவும் ஆசிரியர்களாகவும் வலம்வருகிறார்கள்.

தான் பார்த்த திரைப்படங்களிலிருந்து சில கதாபாத்திரங்களையும், அவர்களின் வாழ்க்கை நிலைப்பாடுகளையும் மணி.எம்.கே.மணி எழுதியிருக்கும் புத்தகம் ‘வேறு சில ஆட்கள்’. பல நேரங்களில் நமக்குக் கதாபாத்திரங்களின் முடிவுகள் சரிவரப் புரியாமல் நழுவிவிடுகின்றன.

அவர்களின் நிலைப்பாடுகள் கேள்விகளோடு தொக்கி நிற்கின்றன. இந்நூலில் திரைப்படங்களின் கதையையும், அதில் முதன்மை பெறும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விரிவாக விளக்குகிறார். திரையில் மௌனமாக எழும் கேள்விகளுக்குக் கட்டுரை வழியே விடை காண முயல்கிறார்.

- கிருஷ்ணமூர்த்தி

வேறு சில ஆட்கள்
மணி.எம்.கே.மணி
பாதரசம் வெளியீடு
விலை: ரூ.100
72992 39786

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x