Published : 30 Nov 2019 11:31 AM
Last Updated : 30 Nov 2019 11:31 AM

நூல்நோக்கு: கதைகளின் ஊற்று

‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்’ கதைகளின் ஊற்று. கற்பனையின் வழியே வாசகரை அசாத்தியமான உயரங்களுக்குக் கூட்டிச்செல்லும் கதைகள் அவை. அந்தக் கதைகளை அணுகும் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்த கதை உலகை உருவாக்கிக்கொள்கின்றனர்.

அவ்வாறாக, ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் குறித்த தனது வாசிப்பனுபவத்தைத் தனி நூலாக்கியிருக்கிறார் சித்துராஜ் பொன்ராஜ். அக்கதைகள் மீதான அவரது ஆரம்பநிலைப் பார்வையில் ஆரம்பித்து அதன் கட்டுமானம், இயங்குமுறை, கதைசொல்லல் பாணி எனப் பல்வேறு தளங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

அக்கதைகளில் வரும் நிகழ்வுகளை விவரிக்கிறார். பிறகு, அதன் மீதான தன் பார்வையை முன்வைக்கிறார். அத்தியாயங்களுக்கான தலைப்பு, அதன் பேசுபொருளுக்கு ஏற்ப அச்சிடப்பட்டிருக்கும் ஓவியங்கள் இப்புத்தகத்துக்குச் சிறப்பு சேர்க்கிறது.

- முகம்மது ரியாஸ்

கதை சொல்லியின்
1001 இரவுகள்
சித்துராஜ் பொன்ராஜ்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை-42.
விலை: ரூ.100
90424 61472

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x