நூல்நோக்கு: இருவேறு நிச்சயமற்ற வாழ்வு

நூல்நோக்கு: இருவேறு நிச்சயமற்ற வாழ்வு
Updated on
1 min read

திருவண்ணாமலை பற்றி மூன்று பாகங்கள் எழுதவிருப்பதாக அறிவித்த அய்யனார் விஸ்வனாத், அதன் முதல் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். நாவலின் பெயர் ‘ஹிப்பி’. சமூகரீதியாக விளிம்பு நிலையில் இருக்கும் இளைஞனின் வாழ்க்கை அவனுடைய அம்மாவின் மரணத்துக்குப் பிறகு நிச்சயமின்மைக்குள் நுழைகிறது.

வெளிநாட்டவர்களை ஈர்க்கும் திருவண்ணாமலையின் ரமணாசிரமத்துக்கு வரும் ஹிப்பி, குழுவுக்கு உதவியாளராகக் காட்டுக்குள் பயணிக்கிறான். அங்கே வேறொரு உலகத்தை எதிர்கொள்கிறான்.

அந்த விவரணைகளே இச்சிறுநாவலின் பெரும் பகுதியாக விரிகிறது. இளைஞனின் சமூகரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும், ஹிப்பிகளின் சுயதேர்வுரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டைப் பேச முயல்கிறது இந்நாவல்.

ஆனால், அது தத்துவார்த்த அனுபவமாகவன்றி வெறும் சம்பவங்களாகவே விரிகின்றன. மேலும், திருவண்ணாமலை பற்றிய நாவலாகவும் உருக்கொள்ளாமல் அது ஒரு பெயர்ச்சொல்லாக மட்டும் இருப்பது இன்னொரு துரதிர்ஷ்டம்.

- முகம்மது ரியாஸ்

ஹிப்பி அய்யனார் விஸ்வனாத்
அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
9840065000
விலை: ரூ.170

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in