Published : 09 Nov 2019 08:19 AM
Last Updated : 09 Nov 2019 08:19 AM

ஹெலிகாப்டருக்குள் ஒரு பயணம்

இயற்கை இறக்கைகளைக் கொண்டு பறக்கும் தும்பிகளைப் போல எந்திர இறக்கைகளைக் கொண்டு பறக்கும் எந்திரத் தும்பிகளை அறிமுகப்படுத்த விழையும் விஞ்ஞானி டில்லிபாவுவின் படைப்பு இது. ஹெலிகாப்டரை இவ்வளவு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் வேறு எவரேனும் எழுதியிருப்பார்களா என்று தோன்றுகிறது. ‘பறப்போம் பதினேழு அத்தியாயங்கள்' என்பதில் தொடங்கும் தமிழ் நடை, ‘தும்பிகளின் தோட்டாக்கள்' என்று நிறைவடையும் ஒவ்வொரு தலைப்பிலான அத்தியாத்தையும் சிறார்கூடப் படிக்க முடியும். ஹெலிகாப்டர் தொடக்க நாட்களில் இருந்த தோற்றத்தில் ஆரம்பித்து இன்று வந்தடைந்திருக்கும் தோற்றம் வரை எழுதுகிறார்.

ஹெலிகாப்டரின் தோற்றம், பாகங்கள், செயல்பாடு, விமானியின் பங்களிப்பு என்று டில்லிபாபு அனைத்தையும் பற்றி விவரிக்கும்போதுதான் இன்னும் தமிழ் மொழியில் எத்தனை ஆயிரம் கலைச் சொற்களை உருவாக்க வேண்டியிருக்கிறது என்பது புலப்படுகிறது. டில்லிபாபு அவரே உருவாக்கியிருக்கும் பல கலைச் சொற்களுக்கு ஆங்கிலச் சொற்களையும் அடைப்புக்குள் தந்திருப்பது நல்ல விஷயம். எந்திரவியலை மேலும் வாசகர்களோடு தொடர்புப்படுத்தும் வகையில் நிறையப் பெட்டிச் செய்திகள் வழி சொல்கிறார் டில்லிபாபு. இந்திரா பார்த்தசாரதி நாவலுக்கு இட்ட தலைப்பிலிருந்து கிரிக்கெட்டில் இடம்பெறும் ஹெலிகாப்டர் ஷாட் வரையிலும் அவை சுவைகூட்டி நிற்கின்றன. நூலில் காணப்படும் படங்களும், படக் கருத்துகளும் அறிவியல் கோட்பாடுகளை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக அமைகின்றன. எந்திரவியலின் தொழில்நுட்பமும் பழகுதமிழின் இளமையும் கலந்த இந்நூல் தமிழ் அறிவியல் நூலகத்துக்கும் புது வரவு. சிறார்களுக்கு மேலும் நல்வரவு!

- மு.முத்துவேலு

எந்திரத் தும்பிகள்- ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்
வி.டில்லிபாபு
முரண்களரி படைப்பகம்,
சென்னை-68
விலை: ரூ.150
தொடர்புக்கு : 98413 74809

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x