

இவை திரைப்படப் பாடல்கள் அல்ல
இசையோடு எழுதப்பட்ட கவிதைகள் என்றாலே அவை திரைப்படப் பாடல்கள் மட்டுமே என்கிற ஒற்றைப் புரிதலைப் புறந்தள்ளி, எளிய சந்தத்தோடு எழுதப்பட்ட 50 பாடல்கள் கொண்ட தொகுப்பிது. கிராம வாழ்வின் வசந்தங்களையும், நகர வாழ்வு சூறையாடிய வாழ்வியல் விழுமியங்களையும் உள்வாங்கி எழுதப்பட்ட பாடல்களாக உள்ளன.
எழுதியவர் பற்றி
தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒத்தச் சொல்லாலே…’என்கிற புகழ் பெற்ற பாடலை எழுதிய, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ என்கிற திரைப்படத்தை இயக்கிய கவிஞர் ஏகாதசி இப்பாடல்களை எழுதியுள்ளார்.
பாடல்களின் சிறப்பம்சம்
சமூகத்தின் சாதியப் படிநிலைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து, இயற்கைப் பாதுகாப்பு, கல்வியில் ஆங்கில மோகம், பெண் விடுதலை ஆகியன குறித்த சமூக மாற்றத்துக்குத் தேவையான சிந்தனைகள், மண்வாசத் தோடு அனை வரும் பாடும் வகையில் பாடல்கள் எழுதப் பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் திரைப்பட மெட்டுக்குள் சிக்காத இசைக் கவிதைகளின் தொகுப்பாக இருப்பது கூடுதல் சிறப்பு.
-மு.முருகேஷ்
ஏகாதசி பாடல்கள்
வெளியீடு: சமம்
42/45, ராஜாங்கம் மத்திய வீதி,
வடபழனி, சென்னை – 600 026.
விலை: ரூ.100/-
தொடர்புக்கு: 72999 01838