Published : 06 Oct 2019 11:54 AM
Last Updated : 06 Oct 2019 11:54 AM

ருஷ்டியின் புதிய நாவல்

சல்மான் ருஷ்டியின் அடுத்த நாவல் வெளியாகியிருக்கிறது. 72 வயதிலும் தளராமல் எழுதிக்கொண்டிருக்கிறார். ‘கிஹோட்டே’ என்ற இந்நாவல் ருஷ்டியின் 14-வது நாவல். ஸ்பானிய நாவலாசிரியரான மிகெல் செர்வாந்திஸ் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய ‘டான் கிஹோட்டே’ என்ற நாவலை 21-ம் நூற்றாண்டுக்குப் பொருத்தி ருஷ்டி எழுதிப் பார்த்த முயற்சி இது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என்ற மூன்று நாடுகள்தான் இந்நாவலின் கதைக்களம். ட்ரம்ப், மோடி போன்றோரைப் பற்றிய விமர்சனங்கள் இந்நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு அங்கதப் படைப்பு. “இருபத்தோராம் நூற்றாண்டில் எழுத்தாளர்களுக்கு மிச்சமுள்ள ஒரே வடிவம் அங்கதம்தான்” என்கிறார் ருஷ்டி. இடையே அவரது சில நாவல்கள் வரவேற்பு பெறாத நிலையில், இந்நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ருஷ்டி தனது பழைய ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x