Published : 01 Oct 2019 10:02 AM
Last Updated : 01 Oct 2019 10:02 AM

வந்தே மாதரம் என்போம்!

வந்தே மாதரம்’ நாடகத்தில் கொடி காத்த குமரனாக இயக்குநர் கார்த்திக் மோகன்.

யுகன்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ‘தியேட்டர் மெரினா’ நாடகக் குழு தேசபக்தியோடு நடத்தும் நாடகம் ‘வந்தே மாதரம் என்போம்’.

சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், தில்லையாடி வள்ளி யம்மை, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் ஆகியோரின் வீரத்தையும், தீரத்தையும் வித்தியாசமான பாணியில் மேடையில் வழங்குகின்றனர் கலைஞர்கள். படைப் பாக்க இயக்குநர் ரா.கிரிதரன். நாடகத்தை எழுதி, இயக்கியதோடு கொடி காத்த குமரனாக நடித்தும் அசத்துகிறார் கார்த்திக் மோகன்.

காந்தியடிகளின் குரலில் முன்மொழி யப்படும் பாத்திரங்கள் பற்றி தனது நாட்டிய அபிநயங்கள் மூலமாகவே அறிமுகப் படுத்தும் சங்கீதா சுரேஷ்பாபு மேடைக்கு புதுவரவாக மட்டுமல்ல, நல்வரவாகவும் இருக்கிறார்.

‘மோனோ ஆக்டிங்’ எனப்படும் தனி நபர் நிகழ்த்து கலையாகவே இந்த நாட கத்தை வடிவமைத்திருப்பது ரசிகர்க ளுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இந்த அனுபவத்துக்கு கிரிதரனின் இசை ஒலியும், ஒளியும் (மனோ லைட்டிங்ஸ் கோவிந்த்) அவ்வளவு ஒத்திசைவு!

வ.உ.சி. (பாலா), தில்லையாடி வள்ளி யம்மை (தீப்தா பட்டாபிராமன்), வாஞ்சி நாதன் (திலீப் மோகன்) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றனர்.

நாட்டின் சுதந்திரத்துக்காக தன்னலம் கருதாமல் பாடுபட்ட இந்த வீரர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில் என்ன பேசியிருப்பார்கள் எனும் மீள்பார்வையையும், சமகால வெறுப்பு அரசியலையும் கேள்விக்கு உள்ளாக்கு கிறது நாடகம்.

சுதந்திரத்தின் அருமை, பெருமையை, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியா கத்தை வித்தியாசமான அணுகுமுறை யோடு பார்வையாளர்களுக்கு கடத்தும் ‘வந்தே மாதரம் என்போம்’ நாடகம் சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று (நாளை) இரவு 7 மணிக்கு மீண்டும் அரங்கேறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x