Published : 21 Sep 2019 10:05 AM
Last Updated : 21 Sep 2019 10:05 AM

பிறமொழி நூலகம்: வாழ்வின் சூத்திரங்களை வெளிப்படுத்திய கலைஞன்

லைஃப் இன் மெடஃபார்ஸ்: போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் காசரவல்லி
தொகுப்பு: ஓ.பி.ஸ்ரீவத்சவா
ரீலிசம்ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு
விலை: ரூ.395

கன்னட சினிமாவின் புதுயுக விற்பன்னர்களில் தலைசிறந்தவரான கிரிஷ் காசரவல்லி திரைப்படங்கள் வழியாகத் தனித்துவம் மிக்க சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்திய விதம் குறித்துப் பேசும் புத்தகம் இது.

1975-ல் தொடங்கி 2015 வரை சுமார் 40 ஆண்டுகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என மொத்தம் 18 படைப்புகளை மட்டுமே வழங்கியிருந்தபோதிலும், காசரவல்லியின் படைப்புகள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக இன்றும் நீடிப்பவை. காசரவல்லி கன்னட இலக்கியத்தின் ஆழத்தை, அது வெளிப்படுத்தும் வாழ்வின் சூத்திரங்களைக் கலைநுணுக்கத்தோடு வெளிக்கொண்டுவந்தவர். அவரது தனிப்பட்ட அணுகுமுறை, தொழில்முறைச் செயல்பாடுகள் குறித்து அவரோடு நெருங்கிப் பழகிய பல்துறை விற்பன்னர்கள் 24 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

- வீ.பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x