Published : 20 Sep 2019 10:32 AM
Last Updated : 20 Sep 2019 10:32 AM

ஷ்ரத்தாவின் மாயக்குதிரை

நாடக மேடை உலகில் கடந்த 9 ஆண்டுகளாக புதிய முயற்சிகளோடு 33 நாடகங்களை அரங்கேற்றி உள்ளது ‘ஷ்ரத்தா’ அமைப்பு. ஆன்மிக நாடகங்கள் முதல் நவீன நாடகங்கள்வரை பல பரீட்சார்த்தமான அணுகுமுறைகளைப் புகுத்தி, நாடக அனுபவத்தை வெகுஜன ரசனைக்கு உரியதாக மாற்றிய இந்த அமைப்பின் அடுத்த படைப்பு `மாயக்குதிரை’.

காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சரசந்தாங்கல் கட்டைக்கூத்து குருகுலம் வழங்கும் சிறுவர்களுக்கான நவீன கட்டைக்கூத்து - பொ.ராஜகோபாலின் `மாயக்குதிரை' இசை, வசனம், நடனம், ஒப்பனை, உடை அலங்காரம் எனப் பல்வேறு அடிப்படை நாடகக் கூறுகளை ஒருசேர பயன்படுத்தும் நுட்பமான கூத்து வடிவம் இது.

பெருங்கட்டூர் பொ. ராஜகோபால் தலைமையில், இக்குழு தமிழகத்தில் கட்டைக்கூத்து வடிவத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. கட்டைக்கூத்து நிபுணர் பொ.ராஜகோபால் எழுதிய `மாயக்குதிரை' எனும் கூத்து, சிறுவர் சிறுமியருக்கு தன்னம்பிக்கையின் மகத்துவத்தை பாடல், நகைச்சுவை, மேஜிக் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு வலியுறுத்துகிறது.

சென்னை தியாகபிரம்ம கான சபா, அப்பாஸ் கல்சுரல்ஸ் ஆதரவில், சிவாஜி சதுர்வேதி பிரேமா சதாசிவம் மற்றும் டி.டி.சுந்தரராஜன் வழங்கும் `மாயக்குதிரை’ கட்டைக்கூத்து இன்றும் நாளையும் சென்னை தி.நகர் வாணி மகாலில் மாலை 7 மணிக்
கும், 22-ம் தேதி சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் மாலை 7 மணிக்கும் அரங்கேறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x