Published : 08 Sep 2019 10:21 AM
Last Updated : 08 Sep 2019 10:21 AM

எழுந்து வா இஸ்ரோ…

சந்திரனில் கால்பதிக்க

எந்திர பறவையாய்

இங்கிருந்து புறப்பட்ட சந்திராயனே...

வெட்டவெளியில் மிதந்து சென்று

வெகுதூரம் கடந்து சென்று

பட்டென்று மலர்ந்தாயே பூப்போலே

சட்டென்று உதிர்த்தாயே விக்ரமெனும் தீயே..

சூரியனைப் பழமென நினைத்து

சுவைக்கப் புறப்பட்ட சாயாபுத்ரன் போல்

சந்திரனை நீரென நினைத்து அருந்த முயன்ற அருந்தவப் பணியில் குதித்த குழவி விக்ரம்.

தொட்டுவிடும் தூரத்தை தொட்டுவிட்டாய்

கை பட்டுவிடும் நேரத்தில் மறைந்து விட்டாய்

கண்பட்டுவிடும் என காணாமல் போனாயோ

புண்பட்டு போனது உன்னை பெற்றவர் நெஞ்சம்.

இந்திரலோகத்து அருமை பெருமைகளை விரித்து எழுதியவர் நாங்கள்

சந்திரலோகத்து தரையின் பரப்பை மிதித்து விடவா முடியாது?

இன்றில்லாவிட்டால் நாளை

நம்பி இருக்கிறோம் இஸ்ரோ எனும் பெருந்தோளை

துவளாதே சிவனே - இமய மலையளவு நம்புகிறோம் உன்னை

இமைக்கும் நொடியில் காணாமல் போன கருவி, போனால் போகட்டும்.

இதுவல்லவோ சாதனை என எல்லோரும் இயம்புகின்ற வகையில் எழுந்து வா இஸ்ரோ

தோல்விகள் புதிதல்ல

நம்பிக்கைகள் புதிது

எழுந்து வா இஸ்ரோ...

- க.அரவிந்த் குமார், ஊடகவியலாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x