Published : 28 Aug 2019 09:49 AM
Last Updated : 28 Aug 2019 09:49 AM

‘அனன்யா சமர்ப்பணா’வின் நாட்டிய சங்கமம்!

இந்தியா, சிங்கப்பூர் நாட்டியக் கலைஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் நடன நிகழ்ச்சி நடத்தி வரும் பிரபல நடனக் கலைஞர் காயத்ரி ஸ்ரீராம், இந்த ஆண்டும் ‘அனன்யா சமர்ப்பணா’ நாட்டிய விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார்.

கலாஷேத்ரா பாணி பரதநாட்டியக் கலையை அதன் முன்னாள் மாணவியான மினல் பிரபுவிடம் கற்றவர் காயத்ரி ஸ்ரீராம். சிங்கப்பூரில் ஸ்ருதிலயா பரதநாட்டியப் பள்ளியை நடத்திவரும் இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ‘அனன்யா சமர்ப்பணா’ நாட்டிய நிகழ்ச்சியை சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இருக்கும் நாட்டியக்கலைஞர்களைக் கொண்டு நடத்திவருகிறார். சிங்கப்பூரில் டாக்டர் ராகவேந்திராவின் சீரிய தலைமையின் கீழ் செயல்படும் ‘அனன்யா’ அமைப்புடன், ‘சமர்ப்பணா’ அமைப்பும் இணைந்து ‘அனன்யா சமர்ப்பணா - 19’ நாட்டிய விழாவை பெங்களூருவில் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடத்தின. இதில் பல்வேறு நடனக் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், நாட்டியம் தொடர்பான கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இந்த 4 நாள் விழா நேற்று நிறைவடைந்தது. இதுகுறித்து சிங்கப்பூர் ஸ்ருதிலயா நாட்டியப் பள்ளி மற்றும் சமர்ப்பணாவின் இயக்குநர் காயத்ரி ஸ்ரீராம் கூறும்போது, ‘‘இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலைகளான ஒடிசி, யட்சகானா, கதக், பரதநாட்டியம் போன்ற பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் பிரபல கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன. சிங்கப்பூரில் உள்ள மோகனப்ரியன் தவராஜாவின் ‘தாண்டவா’ போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலான ரசிகர்களின் ரசனையைத் தூண்டும் விதமாக இருந்தன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x