

புதுடெல்லி
சிதம்பரம் தொடர்பான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளை சிபிஐ தொடர்பு கொண்டுள்ளது.
கடந்த 2007-08 மற்றும் 2008-09 ஆம் ஆண்டுகளில் இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனங்களான ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஐஎன்எக்ஸ் நியூஸ் ஆகிய நிறுவனங்கள், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி செயல்பட்டன.
ஐஎன்எக்ஸ் நியூஸில் மொரீஷியஸிலிருந்து செயல்படும் மூன்று நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் 26% குறைத்து மதிப்பிடப்பட்டதாக கூறப்படும் சட்ட விதிமீறலையும் விசாரிக்கும்படி வருவாய்த்துறை முன்மொழிந்தது. இந்த விசாரணையைத் தடுக்கவும் முதலீட்டிற்கான அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எப்ஐபிபி) அனுமதி பெறவும் லஞ்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா 62 4.62 கோடி வரத்துக்கு எஃப்.ஐ.பி.பி ஒப்புதல் பெற்றிருந்தாலும், அதன் பங்குகளை ஒரு யூனிட்டுக்கு 800 டாலர் பிரீமியத்தில் விற்று ரூ.305 கோடியைப் பெற்றதாக இக்குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.பி.பி வழியாக மேலும் சில நிறுவனங்களின் அன்னிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சட்டவிரோதமாக பயன் பெற்றுள்ளதாக சிபிஐ குற்றச்சாட்டியது.
சிபிஐ கோரிக்கையின் பேரில் சிறப்பு சிபிஐ நீதிபதி வழங்கிய ஜாமீன் அல்லாத வாரண்டின் அடிப்படையில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார், அவர் விசாரணையில் ஒத்துழைக்கவில்லை என்றும் முக்கியமான கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று சிபிஐ குற்றச்சாட்டியிருந்தது.
இந்நிலையில் சிபிஐ நிறுவனம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை அனுப்பியுள்ளது.
ஐந்து நாடுகள்
இந்நிலையில் சிபிஐ நிறுவனம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளை தொடர்பு கொண்டுள்ளது.
''நீதித்துறை கோரிக்கைகள் அடங்கிய இக்கடிதங்கள் இங்கிலாந்து, சிங்கப்பூர், மொரீஷியஸ், பெர்முடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குஅனுப்பப்பட்டுள்ளன. நிதி பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பல போலி நிறுவனங்களின் சந்தேகத்திற்கிடமான பங்கு ஆராயப்படுகிறது.'' என்று சிபிஐ அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரும் ஆகஸ்ட் 26 வரை விசாரணைக்கு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை வைக்கப்பட்டுள்ள சிபிஐ தலைமையகத்தில் கடுமையான காவல் கட்டுப்பாடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் ஒருவழக்கறிஞருடன் நேற்று மாலை 6 மணியளவில் அவரை சந்தித்தனர்.