

பெண்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களை எல்லோருக்கும் புரியும் எளிய மொழியில் சொல்கிறார் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா. பெண்களுக்கான சட்டங்கள் குறித்துச் சொல்வதோடு கூடுமானவரை குடும்ப அமைப்பு சிதையக் கூடாது என்பதும் கட்டுரையின் அடிநாதமாக ஒலிக்கிறது. இருட்டில் தவிக்கும் பெண்களுக்குக் கலங்கரை விளக்கமாகச் சட்டங்கள் துணைநிற்கும் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் ஏற்படுத்தும்.
சட்டமே துணை
பி.எஸ்.அஜிதா
தி இந்து வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98431 31323