Published : 17 Aug 2019 09:52 AM
Last Updated : 17 Aug 2019 09:52 AM

பிறமொழி நூலகம்: நாகாக்கள் கடந்துவந்த பாதை

வீ.பா.கணேசன்

மங்கோலியாவிலிருந்து சீனா, பர்மா வழியாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்குக் குடிபெயர்ந்த நாகா இன மக்களின் வரலாற்றைப் பேசும் புத்தகம் இது. கிராமங்களில் வழங்கும் எழுதப்படாத வரலாற்றுத் தொன்மங்கள், நாகா இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் சம்பவங்கள் ஆகியவற்றைத் தொகுத்த வகையில், நாகா இன மக்கள் கடந்துவந்த பாதையை எடுத்துரைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது. அவர்கள் இந்தியாவை வந்தடைந்த பிறகு 19-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 21-ம் நூற்றாண்டு வரை அந்த இன மக்களிடம் காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரிசைப்படுத்துவதில் தனி இடம் பெறுவதாக உள்ள இப்புத்தகத்தின் ஆசிரியர், ‘இந்து குழும’த்தின் சிறந்த புதினத்துக்கான பரிசைப் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்கிங் த ரோட்லெஸ் ரோட்: எக்ஸ்ப்ளோரிங் தி ட்ரைப்ஸ் ஆஃப் நாகாலாந்த்
ஈஸ்தரீன் கைர்
அலெப் புக் கம்பெனி, புதுடெல்லி – 110 002.
விலை: ரூ.699

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x