Published : 10 Aug 2019 09:27 AM
Last Updated : 10 Aug 2019 09:27 AM

நூல்நோக்கு: அமீரக அனுபவங்கள்

ஏழு ராஜாக்களின் தேசம்
அபிநயா ஸ்ரீகாந்த்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி,
சென்னை-42.
விலை: ரூ.275
90424 61472

அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, புஜைரா, உம் அல் குவைம் ஆகிய ஏழு நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பிரதேசம் ஐக்கிய அரபு அமீரகம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிக முக்கியமான வணிகக் கேந்திரமாகவும் சுற்றுலாத்தலமாகவும் திகழும் துபாயும், அதன் ஏனைய அமீரகங்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பாலைமணலைத் தவிர எந்த வசதியுமற்ற நிலப்பரப்பாக இருந்தது என்ற வரலாற்றை இன்றையை துபாயைக் காணும் ஒருவர் நம்ப மறுப்பார். பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், நாட்டின் உள்கட்டமைப்பு என அனைத்து பரிமாணங்களிலும் அபரிமிதமான உச்சத்தைக் தொட்டிருக்கும் அமீரகத்தைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ‘ஏழு ராஜாக்களின் தேசம்’. அபிநயா அமீரகத்தில் செலவிட்ட இரண்டு ஆண்டுகளில் அறிய நேர்ந்த இடங்களைப் பற்றிய தகவல்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார். அந்தத் தகவல்களை எழுதிச் செல்லும் அவரது மொழிநடை குறிப்பிடத்தகுந்த அம்சமாக உள்ளது.

- முகம்மது ரியாஸ்

புது உருவம் தேடும் கதைகள்

பாதகத்தி
தேனி சீருடையான்
அன்னம், தஞ்சாவூர்-613007
விலை: ரூ.140
04362-239289


தனது ஏழாவது வயதில் பார்வைத்திறனை இழந்து, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்வை பெற்ற தேனி சீருடையான், இதுவரை 7 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் இவரது சிறுகதைகளெல்லாம் மனித வாழ்வின் நுட்பமான கூறுகளை அதிர்வுகளற்ற மொழியில் சொல்லிச்செல்பவை. தனது கதைகளில் கடைப்பிடிக்கும் ஏதேனும் ஒரு அம்சத்திலாவது வழக்கமான கதைப் போக்கிலிருந்து விலகிச் செல்லும் புதுவித உருவத்தையும் தேடலையும் கொண்டதாக அமைத்திருப்பார். இப்புத்தகத்திலிலுள்ள கதைகளும்கூட அப்படித்தான். காதல், உளவியல் சார்ந்த கதைகள் நுட்பமான அவதானிப்புகளுடன் வெளிப்பட்டிருக்கின்றன.

- மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x