இப்போது படிப்பதும் எழுதுவதும்- குறிஞ்சிவேலன், மொழிபெயர்ப்பாளர்

இப்போது படிப்பதும் எழுதுவதும்- குறிஞ்சிவேலன், மொழிபெயர்ப்பாளர்
Updated on
1 min read

1980-களில் மலையாள எழுத்தாளர் விலாசினி ‘அவகாசிகள்’(வாரிசுகள்) எனும் 4000 பக்கங்களைக் கொண்ட நாவலை எழுதியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள ஒரு குடும்பத்தில் நான்கு மாதத்தில் நடைபெறும் சம்பவங்களும், பின்னோக்கிய நிகழ்வுகளுமே நாவலின் மையம். இந்த நாவலைத்தான் தற்போது சாகித்திய அகாடமிக்காக மொழிபெயர்த்து வருகிறேன்.

ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் திறன்கொண்ட கலீல் ஜிப்ரானின் ஓரிரு படைப்புகளைப் படித்திருக்கிறேன். தற்போது கிருஷ்ண பிரசாத்தின் மொழிபெயர்ப்பில் ‘காவ்யா’ வெளியீடாக வந்திருக்கும் ‘கலீல் ஜிப்ரான் கவிதைகள்’ முழுமையான தொகுப்பை வாசித்தேன். இந்திய மொழிகள் பலவற்றில் கலீல் ஜிப்ரானின் கவிதைகள் வந்திருந்தாலும், தமிழில் மிகவும் நேர்த்தியாய் இத்தொகுப்பு வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in