'ஒரு மனிதன், ஒரு இயக்கம்’- மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வாழ்க்கை குறித்த நூல்; ‘ஃபிரண்ட் லைன்’ சார்பில் சென்னையில் 6-ம் தேதி வெளியிடப்படுகிறது

'ஒரு மனிதன், ஒரு இயக்கம்’- மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வாழ்க்கை குறித்த நூல்; ‘ஃபிரண்ட் லைன்’ சார்பில் சென்னையில் 6-ம் தேதி வெளியிடப்படுகிறது
Updated on
1 min read

சென்னை

‘தி இந்து' குழுமத்தின் 'ஃபிரண்ட் லைன்' இதழ் தயாரித்துள்ள மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் அவர் நிகழ்த்திய சாதனை கள் குறித்த ‘ஒரு மனிதன், ஒரு இயக்கம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக ‘ஃபிரண்ட் லைன்' ஆசிரியர் ஆர்.விஜய சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘தி இந்து' குழுமத்தின் ‘ஃபிரண்ட் லைன்' இதழ் தனது 35 ஆண்டுகால சேவையை நிறைவு செய்திருக்கிறது. இந்த வேளையில், மறைந்த முதல் வரும் நீண்ட காலம் திமுக தலை வர் பொறுப்பை வகித்தவருமான மு.கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் பொது வாழ்வில் அவர் ஆற்றிய சேவைகள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய ‘ஒரு மனி தன், ஒரு இயக்கம்’ நூலை தமிழில் வெளியிட இருக்கிறது.

இந்த நூல் வெளியீட்டு விழா, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறு கிறது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று நூலை வெளியிட, அதை கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி பெற்றுக் கொள்கிறார். இவ்விழாவுக்கு ‘தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் தலைமை வகிக்கிறார்.

கடந்த ஆண்டு கருணாநிதியின் மறைவையொட்டி, ‘ஃபிரண்ட் லைன்' இதழ் சார்பில், கருணா நிதியின் வாழ்க்கை, அவரது சாதனைகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்ற ‘எ மேன் அன்டு எ மூவ்மென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கில சிறப்பிதழ் வெளியிடப் பட்டிருந்தது. அதை தமிழில் வெளியிட வேண்டும் என்று வாச கர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அதனைத் தொடர்ந்து அந்த ஆங்கில இதழில் இடம்பெற்றி ருந்த கட்டுரைகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 12 தலை வர்களின் அஞ்சலி, கடந்த 2013-ம் ஆண்டு இந்திய சினிமா நூற் றாண்டையொட்டி, ‘ஃபிரண்ட் லைன்' வெளியிட்ட சிறப்பிதழில் கருணாநிதி எழுதியிருந்த கட்டுரை, கருணாநிதி திரைத்துறையில் இருந்து அரசியல் ஆளுமையாக வளர்ந்தது, முதல்வராக அவர் ஆற்றிய சாதனைகள் அடங்கிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள் ளன. 192 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ரூ.200-க்கு கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in