Published : 27 Jul 2019 09:31 AM
Last Updated : 27 Jul 2019 09:31 AM

பிறமொழி நூலகம்: அடையாள அரசியலின் தோற்றம்

தி ட்ரூத் அபவ்ட் அஸ்: தி பாலிடிக்ஸ் ஆஃப் இன்ஃபர்மேஷன் ஃப்ரம் மனு டு மோடி
சஞ்சய் சக்ரவர்த்தி
ஹாச்செட் புக் பப்ளிஷிங்
குருக்ராம்-122003
விலை: ரூ.499

இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியானது, வருவாயைப் பெருக்கவும் வள ஆதாரங்களைச் சூறையாடவும் முற்பட்டது. அதற்கென அப்போதிருந்த நில உரிமை, வள ஆதாரங்கள், மக்கள்தொகை, வாழ்நிலை ஆகியவற்றுக்கான புள்ளிவிவரங்களைத் திரட்டியது. கிடைத்த தகவல்கள் பன்முகத் தன்மை கொண்டதாக இருந்த நிலையில், அதை எளிமையாக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது. அதன் விளைவே நால்வருணக் கட்டுக்குள் வராத தீண்டத்தகாதவர்களும், வனவாசிகளும் ‘இந்துக்கள்’ என்ற பிரிவுக்குள் அடைபட்டதாகும். மனுதர்ம ஆட்சியை நிலைநாட்ட நடக்கும் முயற்சிகளையும், ஆட்சியாளர்கள் எவ்வாறு அடையாள அரசியலை இதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் சஞ்சய் சக்ரவர்த்தி.

- வீ.பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x