பல்வகைச் சிந்தனைகளின் பரந்தவெளி | நூல் வெளி

பல்வகைச் சிந்தனைகளின் பரந்தவெளி | நூல் வெளி
Updated on: 
1 min read

பத்திரிகையாளர் சூரியசந்திரன் 1993-2006 காலகட்டங்களில் பல ஆளுமைகளைச் சந்தித்துப் பேட்டி கண்டிருக்கிறார். பிரபல கவிஞர்கள், நாவலாசிரியர்கள், கலை, இலக்கிய விமர்சகர்கள், திறனாய்வாளர்கள், ஓவியர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள் எனப் பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

‘50 நேர்​பேச்​சுகள்’ தொகுப்​பில் சூரிய சந்​திரன் உரையாடிய ஆளு​மை​களாக சுரதா, அப்​துல் ரகுமான், அறி​வுமதி என ஓர் அழகான வரிசை தொடங்​கு​கிறது.

இவ்​வரிசையில் எம்.வி.வெங்​கட்​ராம், நகுலன், பிரபஞ்​சன், பா.ஜெயப்​பிரகாசம், இன்​குலாப், சு.சமுத்​திரம், கனி​மொழி, தில​கவதி, பாமா, சிவகாமி, கந்​தர்​வன், பூமணி, இந்​திரன், தேனுகா, ச.தமிழ்ச்​செல்​வன், திலீப்​குமார் உள்​ளிட்ட ஐம்​பது கலைஇலக்​கிய ஆளு​மை​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

பெண் எழுத்து, தலித் எழுத்து, இலங்கை எழுத்து இவற்​றோடு மர​பார்ந்த தமிழ் உணர்வு, இடதுசா​ரியக் கொள்​கைகள், திராவிட ஆதரவு எழுத்​துக்​கள், நவீனத்​துவ இலக்​கியம் எனப் பல்​வகைச் சிந்​தனைப் போக்​கு​களின் பரந்​தவெளியாக இந்​நூல் அமைந்​துள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in