என் விளக்கம்: அ.முத்துலிங்கம்

என் விளக்கம்: அ.முத்துலிங்கம்
Updated on
1 min read

கடந்த இதழில் ஈரநிலா எழுதிய கட்டுரையில் சில தகவல் பிழைகள். கனடா தமிழ் தோட்டமும் டொரொண்டோ பல்கலைக் கழகமும் இணைந்து விருது வழங்கியதாக ஈரநிலாவின் கட்டுரை ஆரம்பிக்கிறது. அது தவறு. இந்த விருதை வழங்கியது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் மட்டுமே. நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இரு நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக விருது வழங்கப்பட்டது.

வைதேகியின் பி.பி.சி. நேர்காணல் நடந்தபோது வைதேகி, 12 சங்க நூல்களை மொழிபெயர்த்துவிட்டார். இதைப் பதிப்பாளர் திருமூர்த்தி உறுதிசெய்கிறார். ஆனால் தமிழ் இலக்கியத் தோட்டம் விருது வழங்கியது மேற்கூறிய இரண்டு நூல்களுக்கு மட்டும்தான்; 12 நூல்களுக்கு அல்ல.

பல்வேறு தமிழ் அறிஞர்கள் சங்க இலக்கிய நூல்கள் பலவற்றை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருக்கிறார்கள். வைதேகி ஹெர்பெர்ட் ஒருவரே 18 சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை பொருள்தந்து மொழிபெயர்த்தவர். இந்த நூல் தொகுதி ஆகஸ்ட் 2014ல் வெளிவந்து விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in