

இறந்துகொண்டிருக்கும் மொழியைத் தேடிச் செல்பவனின் பயணமாக ‘முத்தேழு’ எனும் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். இசையைக் களமாகக் கொண்டு ‘நெடுநல்வாடை’ எனும் பெயரில் திரைக்கதை வடிவிலான புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் புதிய முயற்சி இது.
இசை தொடர்பான நூல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆபிரஹாம் பண்டிதர் எழுதிய ‘கருணாமிர்த சாகரம்’, விபுலானந்தர் எழுதிய ‘யாழ் நூல்’, ஆ.அ. வரகுண பாண்டியன் எழுதிய ‘பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல்’, நா. மம்மது எழுதிய ‘தமிழிசைத் துளிர்கள்’ என்று பட்டியல் நீள்கிறது.
ராஜ் கெளதமன் எழுதிய ‘அறம் அதிகாரம்’, தொ. பரமசிவத்தின் ‘விடு பூக்கள்’ ஆகிய நூல்களும் வாசிப்பில் இருக்கின்றன.