Published : 06 Jun 2015 10:52 AM
Last Updated : 06 Jun 2015 10:52 AM

டான் குயிக்ஸாட்

ஆசிரியர் : மிகேல் தெ செர்வான்ட்டிஸ்

சிறப்பு:உலகின் முதல் நவீன நாவல்.

எழுதப்பட்ட காலம்:17-ம் நூற்றாண்டு

கதை மத்திய காலகட்டத்தில் எழுதப்பட்ட அரசர்களும் குதிரைகளும் ராணிகளும் புழுதிகிளப்பும் சாகசக் கதைகளைப் படித்துவிட்டு, அதனால் அதீதமாகப் பாதிக்கப்பட்டவன்தான் இக்கதையின் நாயகன். லாமாஞ்சா என்னும் எளிய ஸ்பானிய கிராமத்திலிருந்து, மாறிவரும் உலகின் யதார்த்தத்தை உணராமல் ஒரு உதவியாளனையும் அழைத்துக்கொண்டு அலென்சோ குயிக்சானா என்னும் டான் குயிக்ஸாட் செய்யும் பயணங்களும் அவஸ்தைகளும்தான் இந்த நகைச்சுவை நாவல். ஒரு மனிதன் யதார்த்தத்தில் என்னவாக இருக்கிறான்.

ஆனால், அவன் தன்னைப் பற்றி என்னவாக நினைத்துக்கொண்டு செயல்படுகிறான். அவனது எண்ணங்களுக்கும் நடைமுறைக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதைச் சிரிக்கச் சிரிக்க டான் குயிக்ஸாட் கதாபாத்திரம் மூலம் செர்வாண்டிஸ் விளக்குகிறார்.

நாவலின் புகழ்

யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சிப் படமாக ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது.

டான் குயிக்ஸாட் கதாபாத்திரம்

செய்வதற்கு அரிய காரியங்களை ஒருவர் கற்பனை செய்கிறாரென்றாலோ, நடைமுறைப்படுத்த முயல்கிறாரென்றாலோ அவன் “டான் குயிக்ஸாட் போல” என்று ஆங்கிலத்தில் சொல்வது இயற்கையாக உள்ளது.தமிழில் வந்திருக்கிறது சிவ.முருகேசன் மொழிபெயர்த்திருக்கிறார்.

டான் குயிக்ஸாட்
இரண்டு பாகங்கள்
தமிழில்: சிவ. முருகேசன்,
சந்தியா பதிப்பகம்,
புதிய எண்: 77, 53-வது தெரு,
ஒன்பதாவது அவென்யு,
அசோக் நகர், சென்னை-83.
தொடர்புக்கு: 044- 24896979
விலை: ரூ.380/-



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x