இப்போது படிப்பதும் எழுதுவதும்: எம்.ஜி. சுரேஷ், எழுத்தாளர்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: எம்.ஜி. சுரேஷ், எழுத்தாளர்
Updated on
1 min read

சாக்ரட்டீஸ், பிளேட்டோ போன்ற தத்துவஞானிகளை உலகம் கொண்டாடுகிறது. அவர்கள் தோற்றுப்போன இடமும் உண்டு என்பது ஆச்சரியமானதுதானே.

பெண்ணின் இதயம்தான் அது. உலகின் முன் நிமிர்ந்து நிற்கும் அவர்கள் ஒரு சாதாரணப் பெண்ணிடம் தலை குனிந்து காதலுக்காக மன்றாடி நின்று தோற்ற அதிசயத்தை ஆண்ட்ரூ ஷஃப்பர் (Andrew Shaffer) எழுதிய காதலில் தோற்ற தத்துவ ஞானிகள் (கிரேட் ஃபிலாசஃபர்ஸ் ஹோ ஃபெய்ல்டு அட் லவ்) என்ற புத்தகம் சுவையாக விவரிக்கிறது. இதுதான் நான் சமீபத்தில் படித்த புத்தகம்.

களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றே நாம் புத்தகங்களில் படித்துவருகிறோம். உண்மையில் அதுதான் பொற்காலம். ஸ்பார்ட்டகஸ், லெனின் போன்ற ஒரு புரட்சிக்காரன் சேர சோழ பாண்டியர்களைப் புரட்சியில் வென்று ஆட்சியைப் பிடித்தான் என்ற தகவலின் அடிப்படையில், ‘தந்திர வாக்கியம்’ எனும் நாவலை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in