

பிரான்ஸில் வாழும் தமிழ் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காப்காவின் நாய்க்குட்டி’ நாவலைச் சமீபத்தில் வாசித்தேன்.
ஆன்மிகத் தேடல், பொருள் தேடல், சமூகம் சார்ந்த தத்துவார்த்த சிந்தனைகளின் தேடலெனத் தேடித்தேடி அலைகிற மூன்று மனிதர்களின் வாழ்க்கையை இந்த நாவல் மிகச் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறது. தெளிந்த நீரோடையாய் உள்ள நாவலின் நடை கூடுதல் வாசிப்பு சுவாரசியத்தையும் தருகிறது.
ஒரு கிராமத்துப் பெண் பிறப்பு முதல் இறப்புவரை தனது வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களையும், ஆண் மையச் சமுதாய அமைப்பில் அவள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புகளையும் பல கோணங்களில், என் வாழ்க்கை அனுபவத்தோடு சேர்த்து நாவலாக எழுதிவருகிறேன். நாவலின் தலைப்பு ‘ஒரு அக்காவும் ஒரு தம்பியும்’. எழுதி முடித்த பிறகு நாவலின் தலைப்பு மாறக்கூடும்.