

நார்வே எழுத்தாளர் டேக் சூஸ்டாட் எழுதிய ‘ஷைனஸ் அண்ட் டிக்னிட்டி' நாவலை வாசித்தேன். உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பாடம் நடத்தும் இலக்கிய ஆசிரியரைப் பற்றிய கதை. மாணவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் அவரை, இந்த உலகத்தில் தனது இடம் என்ன என்ற கேள்வி துன்புறுத்தத் தொடங்குகிறது. உள்மன யாத்திரை யாக விரியும் அற்புதமான நாவல் இது. ஜார்ஜ் சாண்டர்ஸின் ‘டென்த் ஆஃப் டிசம்பர்’, ஹருகி முராகாமியின் ‘சம்ஸா இன் லவ்’ போன்ற சிறுகதைகளை வாசித்தேன்.
ஓரான் பாமுக் 80-களில் எழுதிய ‘தி ஒயிட் கேஸில்’ நாவலை ‘வெண்ணிறக் கோட்டை’ எனும் தலைப்பில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். துருக்கியைச் சேர்ந்த எஜமானன் ஒருவன், இத்தாலியைச் சேர்ந்த அடிமையை வாங்கிவருவான். அடிமையிடம் உடல் உழைப்பை அல்ல; அறிவியல் அறிவைக் கற்றுக்கொள்வான். போகப்போக எஜமான் அடிமையாகவும், அடிமை எஜமானாகவும் மாறும் அடையாள மாறாட்டம்தான் கதை.
சுண்டல்
டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகங்களுடன் இணைந்து குழந்தைகள் இலக்கியம்குறித்த 2 நாள் முகாமை (மே 16 மற்றும் 17) நடத்தப்போவதாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். குழந்தை இலக்கிய நூல்கள், தமிழ் காமிக்ஸ், குழந்தைகள் சினிமா என்று குழந்தைகள் இலக்கியம்குறித்த பார்வையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தும்விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கட்டணம்: ரூ.1,000. பதிவு செய்யக் கடைசித் தேதி: மே 10. தொடர்புக்கு: 9940446650.