

மாற்று நாடக இயக்கம் நடத்தும் 3-ம் ஆண்டு நாடக விழா மற்றும் 13-ம் ஆண்டு நாடகப் பயிற்சிப் பட்டறை ஜூன் 1 முதல் 10 வரை, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் நடைபெறுகிறது.
பிரளயன், இரா. ராஜூ,கி. பார்த்திபராஜா, நடேஷ் முத்துசாமி, கே.ஏ. குணசேகரன், அ. மங்கை, ப. அகிலா, கு. விஜயகுமார், கே.எஸ். கருணாபிரசாத், கோ. பழனி, சீ. சாரதி கிருஷ்ணன் ஆகியோரின் நாடகங்கள் இடம்பெறுகின்றன.
நாடகங்களுடன் சூஃபி இசை நிகழ்ச்சியும் இடம்பெறுவது குறிப்பிடத் தக்க அம்சம். 80 மாணவர்கள் கலந்துகொள்ளும் நாடகப் பயிற்சிப் பட்டறையில் பேராசிரியர்கள் சே. ராமானுஜம், மு. ராமசாமி உள்ளிட்டோர் பயிற்சியளிக்கின்றனர்.