

சீனாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கும் நூல் இது. சீனப் பெருமைவாதம், இந்தியத் தற்பெருமைவாதம், சீன அதிசயங்களில் இந்தியா உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சீனாவுக்கு பவுத்தத்தை அளித்த இந்தியாவுடன் அதற்கு இருக்கும் தொன்மையான உறவை இந்நூல் பல உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. சீனா மீது இந்தியர்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் மீதும் இந்நூல் கவனம் குவிக்கிறது.
சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் பொதுவாக இருக்கும் தொல்கதைகளைப் பேசுகிறது. 1960-களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட எல்லைத் தகராறில் சீனாவுக்கு ஆதரவாகப் பேசுகிறது. சீனாவின் பண்பாட்டு, கலாச்சாரச் சிறப்புகளை நிறையப் பேசுகிறது இந்நூல். பெரும் வல்லரசாகவும், வரத்தகரீதியான ஏகாபத்தியக் கனவோடும் இன்று நடைபோட்டுக்கொண்டிருக்கும் சீனாவின் தற்போதைய நிலை குறித்து எந்தக் குறிப்பையும் ஆசிரியர் கொடுக்கவில்லை.
சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள்
டி.ஞானையா
அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
10, மூன்றாம் குறுக்குத் தெரு
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர் விரிவு
சென்னை-41
தொடர்புக்கு: 94442 44017
- அழகு தெய்வானை