

தமிழ் மொழி இலக்கணம், கல்வியியல், பெரியாரியல், உரைநடையியல் என 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் நன்னன்.
தூய்மையான தமிழில் பேசுவது மற்றும் எழுதுவதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவரும்கூட. அவரது ஆளுமை, புலமை, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை உள்ளடக்கி பேராசிரியர் ப. மருதநாயகம் இந்த நூலை எழுதியுள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைநூல்களை மட்டுமே 1989 வரை எழுதிவந்தவர் நன்னன்.
தனிநூல்களை 1990-ல் தான் எழுதத் தொடங்கினார். ‘தொல்காப்பியர், பவணந்தி ஆகிய இருவருக்கும் பிறகு தமிழ்மொழியில் படியும் அல்லது படியச்செய்யும் மாசுகளை’யாரும் துடைக்க முயலாததால் அப்பணியைத் தாமே வாழ்நாள் பணியாகச் செய்துவருகிறார் நன்னன் என்கிறார் நூலாசிரியர்.
பேராசியர் நன்னன்,
பேராசிரியர் ப.மருதநாயகம்
ஏகம் பதிப்பகம்
அஞ்சல் பெட்டி எண்: 2964
3, பிள்ளையார் கோயில் தெரு, இரண்டாம் சந்து,
முதல் மாடி, திருவல்லிக்கேணி,
சென்னை-05
தொடர்புக்கு: 944490194
விலை: ரூ.110