இப்போது படிப்பதும் எழுதுவதும்

இப்போது படிப்பதும் எழுதுவதும்
Updated on
1 min read

ஊரான மேலாண்மறைநாட்டில் நடந்த பல்லக்கு வழக்கு எனும் நிகழ்வின் அடிப்படையில் நாவல் ஒன்றை எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், ‘மாதொருபாகன்’ நாவலுக்காக பெருமாள்முருகன் சந்தித்த பிரச்சினைகளால் கலவரமடைந்து அந்த நாவலை எழுதுவதற்குத் தயங்கிக்கொண்டிருக்கிறேன்.

ப. ஜீவகாருண்யன் எழுதிய ‘கிருஷ்ணன் என்றொரு மானுடன்’ நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சீதை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நாவல், கடவுளாக வழிபடப்படும் கிருஷ்ணனை ஒரு மனிதனாக நம் பார்வைக்கு வைக்கும் படைப்பு. வட மாநிலங்களில் கிருஷ்ணன் எத்தகைய பலம் பொருந்திய பிம்பம் என்பதைத் தொலைக்காட்சித் தொடர்களிலேயே தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், அமானுஷ்ய சக்திகள் இல்லாத கிருஷ்ணனை இந்நாவலில் எழுதியிருக்கிறார் ஜீவகாருண்யன்.

சுண்டல்

அருந்ததி ராயின் முன்னுரையுடன் கடந்த ஆண்டு வெளியான அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ ஆங்கில நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புத்தகத்தை விட நீளமான அந்த முன்னுரையில் முக்கால்வாசி காந்தியைப் பற்றியே இருந்ததால் கோபமடைந்த தலித் சிந்தனையாளர்கள் பலர், ராய்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது காந்தியின் தரப்பில் அருந்ததி ராய்க்கு வலுவான எதிர்வினை ஒன்று வெளியாகியிருக்கிறது. காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியின் சிறு நூல்தான் அது.

அருந்ததி ராய் ‘வேண்டுமென்றே பார்க்கத் தவறிய’ உண்மைகளை அவர் இந்த நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘காந்தி இன்று’ இணையதளத்தின் ஆசிரியரான சுனில் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாகத் தமிழிலும் இந்த நூல் வெளிவரவிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in