பெட்டகம் - 11/04/2015

பெட்டகம் - 11/04/2015
Updated on
1 min read

வங்க மொழி இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான அதீன் பந்தோபாத்யாய் எழுதிய ‘நீல்கந்தா பாகிர் கோஜே’ (அந்த நீலகண்டப் பறவையைத் தேடி) நாவல் மிக முக்கியமானது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தைச் சித்திரிக்கும் நாவல் இது. கல்வியில் சிறந்தவரான மணீந்திரநாத் கல்கத்தாவுக்குச் சென்று படிக்கும்போது, பாலின் எனும் ஆங்கிலேயப் பெண்ணைக் காதலிக்கிறார். தனது தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வங்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்.

தனது காதலியை நினைத்து மருகி மனம் பேதலிக்கும் மணீந்திரநாத், கற்பனை உலகில் அவளைத் தேடி அலைகிறார். தனது கணவர் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி அலைந்தாலும் அவரை மிகவும் நேசிக்கிறாள் அவரது மனைவி. இவர்களின் மனப் போராட்டங்கள், சோனாலிபாலி ஆற்றங்கரைக் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களின் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களைப் பதிவுசெய்யும் இந்நாவல் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ என்று தமிழில் வெளியாகி, தமிழ் வாசிப்புலகிலும் வரவேற்பைப் பெற்றது. தனது அசாத்திய உழைப்பின் மூலம் இதை நேரடித் தமிழ் நாவலாக உணரச் செய்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in