மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா
Updated on
1 min read

தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன் மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அத்துடன் கம்ப ராமாயணம் போன்ற செவ்வியல் இலக்கியத்தையும் மொழிபெயர்த்துள்ளீர்கள். தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?

தமிழுக்கும் மலையாளத்துக்கும் பகிர்ந்துகொள்ளப் பொதுவான வரலாறு உண்டு. ஆனால் கலாசார ரீதியான, இலக்கிய ரீதியான இடைவெளிகள் இரண்டு மொழிகளுக்கிடையில் அதிகரித்துவருகின்றன. சமகால ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் குறித்து நமக்குப் பரிச்சயம் உள்ளது.

அதேவேளையில், தமிழிலும் கன்னடத்திலும் எழுதிவரும் முக்கியமான எழுத்தாளர்கள் யாரென்று நாம் அறிந்துகொள்வதில்லை. தமிழ் மொழி மீது காதல் ஏற்படுவதற்கு, மலையாளத்தின் சிறந்த கவியான எம்.கோவிந்தனுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவராலேயே நான் தமிழைக் கற்றேன். மொழிபெயர்க்கவும் தொடங்கினேன்.

- நன்றி: தி இந்து ஆங்கிலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in