

பவன் வர்மாவின் ‘தி கிரேட் இந்தியன் மிடில் கிளாஸ்’ என்ற புத்தகத்தைத்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுதந்திரப் போராட்டத்தை மத்தியதர வர்க்கம் முன்னெடுத்த விதத்தையும் சுதந்திரத்துக்குப் பிறகான மத்தியதர வர்க்கத்தின் வரலாற்றையும் இதில் விவரித்துள்ளார் பவன் வர்மா. 1964 நேரு மரணத்துக்குப் பிறகு மத்தியதர வர்க்கத்தின் லட்சியவாத வீழ்ச்சி தொடங்குகிறது; சுயநலம் பெருகுகிறது; உலகமயமாக்கலுக்குப் பிறகு இது இன்னமும் மோசமாகிறது என்கிறார் பவன் வர்மா.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் செங்கொடி இயக்க வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கே ஜமீன்தார்கள், பண்ணையார்கள், சைவ மடம் என மூன்று விதமானவர்களின் கைகளில்தான் நிலங்கள் இருந்தன. இந்த நிலவுடைமைக்கு எதிராகச் செங்கொடி இயக்கம் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்தும் இதில் எழுதவிருக்கிறேன்.