

பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘நவ்வல்’ எனும் நாவலை எழுதிய குருசு சாக்ரடீஸ் சமீபத்தில் எழுதியிருக்கும் புத்தகம் ‘கல்லிவலி’. அதைத்தான் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். ‘நவ்வல்’ நாவல் வெளியானபோது, பலத்த எதிர்ப்பைச் சந்தித்தவர் குருசு சாக்ரடீஸ். அவரது சொந்த ஊரிலேயே அவரைச் சிலர் கடுமையாகத் தாக்கினர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர் எழுதியிருக்கும் மிக முக்கியமான புத்தகம் இது என்பேன்.
‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை’ எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘உன்மத்தப் பித்தன்’ எனும் தலைப்பில் வெளியிடும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நான் சமீபத்தில் வரைந்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஓவியங்கள் சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் பாராட்டினர். தொடர்ந்து வரைந்துகொண்டும் இருக்கிறேன்.