ஊரை உலுக்கும் சுவரோவியங்கள்

ஊரை உலுக்கும் சுவரோவியங்கள்
Updated on
1 min read

கொச்சி நகரில் கால் பதித்தவுடன் நம் கண்களையும் காதுகளையும் வந்தடையும் முதல் செய்திகளில் ஒன்றாக ‘கெஸ்ஹூ' என்ற அநாமதேய சுவரோவியக் கலைஞரைப் பற்றியும், அவருடைய ஓவியங்களையும் பற்றியதுமாக இருக்கும்.

வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள அநாமதேய சுவரோவியங்கள், இவர் மூலம் இந்தியாவுக்கும் வந்துவிட்டன. கறுப்புவெள்ளையில் கொச்சி நகரில் ரகசியமாக வரையப்படும் இந்த ஓவியங்கள் இணையத்தில் அதிரடியாகப் பிரபலமாகி வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ‘கொச்சி - முசிறி சர்வதேச ஓவியக் கண்காட்சி' 2012-ம் ஆண்டு தொடங்கியபோது கொச்சி தெருக்களில் கெஸ்ஹூ வரைய ஆரம்பித்தார். கெஸ்ஹூவின் ஓவியங்கள் அந்த கண்காட்சிக்கு எதிரான இயக்கம் போலவே இருந்தது.

பேருந்து நிலையங்கள், கடற்கரை, மர நிழல் என பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கும் இந்த ஓவியங்கள் உலக பண்பாட்டு அம்சங்களை, கேரளத் தன்மையுடன் பிரதிபலிப்பதாக இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. கதகளி ஆடும் மைக்கேல் ஜாக்சன், கேரள முண்டு உடை அணிந்த மோனோலிசா, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கும் பிகாசோ, கூலி வேலைக்காரரைப் போல உடையணிந்திருக்கும் சேகுவேரா என அவருடைய ஓவியங்கள் அரசியல் நையாண்டி, நகைச்சுவையை பிரதிபலிக்கின்றன.

கெஸ்ஹூ யார் என்ற கேள்வி எழுந்தபோது, “ஓவியம்தான் முக்கியம். யார் வரைகிறார் என்பதில்லை. முகம் தெரியாமல் இருப்பதால் என்னுடைய பாலினம், மதம், சாதி, வயது பற்றிய முன்தீர்மானங்கள் இருக்காது இல்லையா?” என்று பதில் கேள்வி தொடுக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in