

அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட 1949, நவம்பர் 26 என்னும் நாளை முன்னிட்டு, தலித் செயல் பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் ‘சாதி இன்று’ என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கமாக ஒரு அறிக்கையும் இருக்கிறது. இந்த அறிக்கை ஏன் வெளியிடப்படுகிறது என்பதை நூலின் ஆரம்பத்தில் தெரிவிக்கும்போது, “இன்றைய சாதி அமைப்பின் இயங்கு நிலையை/ யதார்த்தத்தைப் புரிந்து
கொள்வதன் மூலமே அதனை எதிர்கொள்ள முடியும் என்கிற விதத்தில் தலித் ஒடுக்குமுறை, சாதி ஒழிப்புக்கான திட்டம் என்றெல்லாம் அமையாமல் முழுக்க சாதியின் பரிணாமங்களைப் பேசுவதாக மட்டுமே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
சாதிகளின் தோற்றம், தமிழ் நவீன அரசியல் உருவாக்கமும் சாதிகளின் எழுச்சியும், சாதியும் தீண்டாமையும் உள்ளிட்ட பல தலைப்புகளில் சாதியின் பல்வேறு பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டுள்ள இந்நூல் பரந்துபட்ட விவாதத்தையும் விமர்சனத்தையும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது.
- ரிஷி