

லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ நாவலைப் படித்தேன். அதிகாரம் என்பது மனித குலத்தைப் பொறுத்தவரை பாசிசத்தால் தக்கவைக்கப்படுவதுதான் என்ற சார்த்தரின் கருதுகோளுடன் தொடங்குகிறது இப்படைப்பு. கானகன் நாவலில் வரும் அரசியல் இப்படித் திட்டமிடப்படுவதில்லை. அங்குள்ள மிருகங்களின் பழிவாங்கும் உணர்வும் வன்மமும் ஒருவகையான நீதியின் பாற்பட்டே நிகழ்கிறது என்பதைக் கடின உழைப்பு, அவதானிப்பின் மூலம் இயல்பான நடையில் சொல்லியிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார்.
ஒரு வருடமாக எழுதிய 300 கவிதைகளைத் தொகுத்து ‘தண்ணீர் சிறகுகள்’ என்ற தலைப்பில் வெளியிட உள்ளேன். ‘வேனல்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி மக்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக்கொண்டு ஒரு நாவலை எழுதத் தொடங்கியுள்ளேன். - கலாப்ரியா, கவிஞர்.