Published : 14 Jul 2019 07:30 AM
Last Updated : 14 Jul 2019 07:30 AM

எக்காலத்துக்கும் பொருந்தும் ஆண்டாள்!

பாரம்பரியமான பரதநாட்டி யத்திலும், நவீன நாட்டிய முறைகளிலும் பல பரி சோதனை முயற்சிகளை செய்து காட்டியவர் அனிதா ரத்னம். அவர் தனது குழுவினருடன் ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ நாட்டிய நாடகத்தை சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் சமீபத்தில் அரங்கேற்றினார்.

வரலாற்று ரீதியாக தன் காதலை முதன்முதலில் பொதுவெளியில் மிகவும் தீர்க்கமாகப் பேசிய பெண் ணின் குரலாக பதிவாகியிருப்பது ஆண்டாளின் குரல்தான். கிருஷ் ணன் மீதான ஆண்டாளின் அன்பை விளக்கும் காட்சிகளுக்கு ஊடா கவே பசு, மரம், செடி, கொடி, குயில், கிளி, சங்கு, புல்லாங்குழல் என எல்லாவற்றின் மீதான ஆண்டாளின் நேசமும் நாடகத்தில் ரம்மியமான காட்சிகள் ஆகியிருக்கின்றன. மழை, புல், பூண்டு என எல்லா அழ கியலும் ஆண்டாளாகவே நமக்கு தரிசனமானது.

கிருஷ்ணனுடனான பிரிவால் அலைக்கழிக்கப்படும் நிலையை, ஆண்டாளாகத் தோன்றிய அர்ச்ச னாவின் உடல்மொழியும், அபி நயங்களும் திறமையாக வெளிப் படுத்தின. கிருஷ்ணன் மீதான பாசம், காதல், பிரிவு போன்ற எல்லா உணர்ச்சிகளையும் சமகால பெண் எழுச்சிக்கான பிரதிநிதி யாகவே ஆண்டாள் எதிரொலிப்பது போல இருந்தது.

‘கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’, ‘கண்ணன் என்னும் கருந்தெய்வம்’ ஆகிய நாச்சியார் திருமொழிப் பாசுரங்களை காட்சிப் படுத்திய விதம் ஆண்டாளின் ஒட்டு மொத்த கிருஷ்ண பிரேமையை ரசிகர்களிடமும் கடத்தியது.

பாற்கடல் வண்ணனிடம் சேர்ப் பிக்கும்படி மன்மதனிடம் ஆண் டாள் வேண்டுவது, குயில், மேகத்தை தூது விடுவது, கிளியை துணைக்கு அனுப்புவது போன்ற காட்சிகளில் இறைவனையே விரும் பும் ஆண்டாளின் உன்னதமான காதல் ரசனையோடு காட்சிப்படுத் தப்பட்டிருந்தது.

பல்லக்கில் கிருஷ்ணன் வருவது, கிருஷ்ணனோடு ஆண் டாள் ஐக்கியமாவது ஆகிய காட்சி கள் ரசிகர்களை பக்தர்களாக மாற் றும் வகையில் தத்ரூபமாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அரங்கரிடம் முத்துக்குறி கேட்கும் வழக்கம் இன் றைக்கும் வில்லிப்புத்தூரில் இருக்கிறது. அதுவும் ஒரு காட்சி யாக வந்தது எக்காலத்துக்கும் பொருந்துபவளாக ஆண்டாளை நம்முன் நிறுத்தியது.

18 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேற்றிய ‘ஆண்டாள்’ நாட்டிய நாடகத்தில், ரேவதி சங்கரன் செவிலித் தாயாகவும், அனிதா ரத்னம் ஆண்டாளாகவும் தோன்றி னர். இப்போது அனிதா ரத்னம் செவிலித் தாயாகவும் அர்ச்சனா எனும் இளம்பெண் ஆண்டாளாக வும் தோன்றினர். விஷ்ணு சித்தர், அரையர் பாத்திரத்தில் மட்டும் ஆண்கள் தோன்ற, சென்னை, பெங்களூரு, டெல்லியை சேர்ந்த 7 பெண்கள் இந்த நாட்டிய நாடகத் தில் பங்களித்திருந்தனர். நாட்டிய நாடங்களுக்கான பாசுரங்களைப் பாடி, அதற்கு உயிரோட்டமான இசையையும் தகுந்த கலைஞர் களைக் கொண்டே வழங்கியது சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x