

வேளாண் துறை மாணவரும் பயண ஈடுபாடு கொண்டவருமான அதியமான கார்த்திக், ஆப்பிரிக்க மண்ணின் வழியே மேற்கொண்ட பயணங்கள், சாகச அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அதைக் கடித வடிவில் வாசகர்களுக்குக் கடத்துகிறார். கொள்ளையர்கள், திருடர்கள், விலைமாதர்கள், நகரங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பூர்வகுடிகள், மலைவாசிகள் எனப் பல்வேறு விதமான வாழ்க்கையை விவரிக்கிறார். வரலாற்றையும் நாடோடிக் கதைகளையும் அந்தந்த பிராந்திய அரசியலோடு பேசுகிறார். அதன் வழியே உலகளாவிய வணிகத்தையும் அதன் அறத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். துரத்தப்படும் பழங்குடியினரின், பூர்வகுடியினரின் வாழ்க்கை அடமானம் வைக்கப்பட்டதன் அடையாளமாக நுகர்வுக் கலாச்சாரம் இருக்கிறது. காலத்தால் கைவிடப்படும் நாடோடிகளின் இழப்பையும் நவீன வணிகத்தையும் எதிரெதிர் முனையில் நிறுத்தி எதிர்கால இயற்கை வளம் குறித்த சந்தேகத்தை ஒவ்வொரு பக்கமும் எழுப்புகிறது.
நாடோடியின் கடிதங்கள்
அதியமான் கார்த்திக்
வம்சி புக்ஸ்
திருவண்ணாமலை-606601.
9445870995
விலை: ரூ.400