Published : 13 Jul 2019 09:08 am

Updated : 13 Jul 2019 09:08 am

 

Published : 13 Jul 2019 09:08 AM
Last Updated : 13 Jul 2019 09:08 AM

நூல்நோக்கு: கலைக்களஞ்சியனின் கதை

கலைக்களஞ்சியனின் கதை

இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் கிடைத்த வேலையைத் தனது கனவுப் பணிக்காக ஏற்க மறுத்தவர் அவர். தூரனை மட்டுமில்லை அவரது காலத்தில் வாழ்ந்த தி.சு.அவினாசிலிங்கம், கல்கி என்று மாமனிதர்கள் பலரையும் அறிந்துகொள்ள உதவுகிறது இந்நூல்.


- புவி

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்

பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம்

சாகித்ய அகாதெமி, சென்னை- 18

விலை: ரூ.260

 044 24311741

முக்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதனில்

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் என்ற திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் அத்திமர வரதர் வைபவத்தையொட்டி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். காஞ்சிபுரத்தின் பெருமை, அவதார வரலாறு, சரஸ்வதி வேகவதியாக வந்த கதை, கோயிலின் அமைப்பு, உற்சவங்கள், காஞ்சியுடன் தொடர்புள்ள ஆசார்யர்கள், திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சி தொடர்பான பாசுரங்கள், திருக்கச்சி நம்பிகள் அருளிய தேவராஜ அஷ்டகம், கூரத்தாழ்வானின் வரதராஜ ஸ்தவம், மஹா தேசிகன் அருளிய மெய்விரத மான்மியம், அடைக்கலப்பத்து, திருச்சின்னமலை, அருத்த பஞ்சகம், மணவாள மாமுனிகள் அருளிய ஸ்லோக மாலிகை என்று எதுவும் விடுபடாமல் தொகுக்கப்பட்ட நூல். அத்திகிரியாரை சேவிக்க வரிசையில் நிற்கும்போது படிக்கவும், தினசரி பாராயணம் செய்யவும் உகந்தது.

- ஜூரி

புகழ் மணக்கும் அத்தி வரதர்

க.ஸ்ரீதரன்

நர்மதா வெளியீடு

தியாகராய நகர், சென்னை-17.

விலை: ரூ.60

 98406 68756


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x