Published : 13 Jul 2019 09:10 am

Updated : 13 Jul 2019 09:10 am

 

Published : 13 Jul 2019 09:10 AM
Last Updated : 13 Jul 2019 09:10 AM

360: 186 பக்கங்கள்... 10,587 ரூபாய்... ராமாநுஜத்தின் புதிய புத்தகம்!

360-186-10-587

186 பக்கங்கள்... 10,587 ரூபாய்... ராமாநுஜத்தின் புதிய புத்தகம்!

நம் காலத்தின் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான சீனிவாச ராமாநுஜத்தின் முதல் ஆங்கிலப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. சர்வதேச அளவில் தரமான ஆய்வு நூல்களுக்கான நன்மதிப்பைப் பெற்ற ‘ரௌட்லஜ் பதிப்பக’த்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘ரெனன்சியேஷன் அண்டு அன்டச்சபிளிடி இன் இண்டியா’ வெறும் 186 பக்கங்கள்தான்; ஆனால், விலை எவ்வளவு தெரியுமா? ரூ. 10,587. “இது சர்வதேசப் பதிப்பு என்பதால் இந்த விலை; விரைவில் தெற்காசியப் பதிப்பு வெளியாகும்; அது ஆயிரத்துச் சொச்சத்துக்குள் அடங்கும்” என்று சொல்கிறார்கள். புத்தகங்களுக்கான விலையை பக்கங்கள் வழியாக மட்டுமே சர்வதேசம் தீர்மானிப்பதில்லை என்பதற்கும் தமிழில் புத்தகங்கள் எவ்வளவு மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதற்கும்கூட இந்தப் புத்தகத்தை உதாரணமாகச் சொல்லலாம். ராமாநுஜம் தமிழில் எழுதி சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூலின் ஆங்கில வடிவமாகவே ‘ரெனன்சியேஷன் அண்டு அன்டச்சபிளிடி இன் இண்டியா’ உருவானது.


இந்தியாவின் தலையாயப் பிரச்சினையான தீண்டாமையின் வேர்களைப் பிடிக்க முற்படும் இந்தப் புத்தகத்துக்காகத்தான் ‘இந்து தமிழ்’ விருதை ராமாநுஜம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 244 பக்கங்களில் ‘மாற்று பதிப்பக’த்தின் வெளியீடாக வந்த அந்த புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.200. தன்னுடைய ஆங்கில நூலை அப்படியே மொழிபெயர்ப்பாகக் கொண்டுவராமல், தமிழ் நூலின் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு எழுதத் தொடங்கிய ராமானுஜம் தமிழில் இல்லாத சில அத்தியாயங்கள், விஷயங்களையும் ஆங்கில நூலில் சேர்த்திருக்கிறார். தமிழ் நூலின் அடுத்த பதிப்பு விரிவாக்கப்பட்டதாக வெளியாகும்போது ஆங்கில நூலில் உள்ள விஷயங்களும் அதில் சேர்க்கப்படும் என்று அவர் சொல்கிறார். தமிழுக்கு மேலும் வளம் சேரட்டும்!

பம்மலுக்கு வருகிறார் அண்ணா!

வாசகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அண்ணாவின் ஆளுமையைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்கு நாளை (ஜூலை 14) மாலை 6 மணிக்கு பம்மல் பசும்பொன் நகரிலுள்ள இம்மானுவேல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் ‘பகுத்தறிவாளர் பேரவை’யின் சார்பில் சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி அரங்கில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும். முன்பதிவுசெய்துகொள்ள: 94449 04896



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x