Last Updated : 13 Jul, 2019 09:07 AM

 

Published : 13 Jul 2019 09:07 AM
Last Updated : 13 Jul 2019 09:07 AM

பிறமொழி நூலகம்: பெண்ணுரிமைப் போராட்டம்

நம்பூதிரிகள் கேரள சமூகத்தையே கைப்பிடிக்குள் வைத்திருந்தவர்கள். அவர்களது வீட்டின் இருட்டறையில் கிடந்த, அந்தர்ஜனம் என்று அழைக்கப்பட்ட, நம்பூதிரிப் பெண்களின் நிலையை மாற்றியமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 1905-06-ம் ஆண்டுகளில் கணவனுக்குத் துரோகம் செய்து பிற ஆண்களுடன் உறவுகொண்டார் என பாப்பிக்குட்டி என்ற நம்பூதிரிப் பெண்ணை சாதிவிலக்கு செய்ய வழக்கு நடந்தது. தன்னை ஒரு போகப்பொருளாகப் பயன்படுத்திய கயவர்களை அவர் பட்டியலிட, அரச வம்சத்தவர் உள்ளிட்ட 64 உயர்குடி மக்களை நாட்டை விட்டே விலக்கி வைக்க நேரிட்டது; நம்பூதிரிகளின் சாம்ராஜ்யமும் அன்றோடு சரிந்து விழுந்தது.

அவுட்கேஸ்ட்

மாதம்பு குஞ்ஞுகுட்டன்

ஆங்கிலத்தில்: வசந்தி சங்கரநாராயணன்

அலெப் வெளியீடு

தார்யாகஞ்ச்,

புதுடெல்லி - 110 002.

விலை: ரூ.499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x