Published : 29 Jun 2019 09:36 AM
Last Updated : 29 Jun 2019 09:36 AM
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4-ம் தேதி தொடங்கவிருக்கும் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழறிஞர்களோடு ஒரு அரசியல் தலைவரும் கலந்துகொள்ளவிருக்கிறார். அவர், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான சி.மகேந்திரன். ‘தமிழரின் தொன்மையான அறிவுக் கோட்பாடு’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசிக்கச்செல்லும் மகேந்திரனுக்கு அவரது சொந்த ஊரான தஞ்சையில் தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஜூன் 30 அன்று வழியனுப்பு விழா நடத்துகின்றன. முழுநேரக் கட்சிப் பணிகளுக்கு நடுவிலும் இந்தக் கட்டுரையை எழுதி முடிப்பதற்காக, கடந்த ஆறு மாதங்களாகப் பயண நேரங்களைப் படிப்பதற்கான நேரமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் சி.மகேந்திரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!