Published : 06 Aug 2017 01:00 PM
Last Updated : 06 Aug 2017 01:00 PM

புத்தகத் திருவிழாவும் விருதுகளின் திருவிழாவும்!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும’த்தின் சார்பில் தற்போது நடந்து முடிந்திருக்கும் ‘சென்னை புத்தகத் திருவிழா’வின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று சிறந்த புத்தகங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகள். 2016-2017-ம் ஆண்டுகளில் வெளியான சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, வரலாறு, கல்வி, சுற்றுச்சூழல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பெண்ணியம், என 10 தலைப்புகளில் நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கூடவே, ஒரு சிறப்புப் பரிசும் அறிவிக்கப்பட்டது. பரிசுத் தொகை தலா ரூ. 5 ஆயிரம். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன்,

ச.தமிழ்செல்வன், பத்திரிகையாளர்கள் ப.திருமாவேலன், கவிதா முரளிதரன் ஆகியோரைக் கொண்ட குழு பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்தது. விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

1. கவிதைத் தொகுப்பு: மர்ம நபர் – தேவதச்சன், உயிர்மை பதிப்பகம்.

2. சிறுகதைத் தொகுப்பு:முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு – அகரமுதல்வன், டிஸ்கவரி புக் பேலஸ்

3. நாவல்: 1801 – மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., அகநி வெளியீட்டகம்

4. கல்வி: இது நம் குழந்தைகளின் வகுப்பறை – சூ.ம. ஜெயசீலன், அரும்பு வெளியீடு.

5.கட்டுரை: மேக்நாட் சாகா – தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம்.

6. வரலாறு: சென்னப்பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத், பாரதி புத்தகாலயம்.

7. சுற்றுச்சூழல்: தட்டான், ஊசித் தட்டான்கள் அறிமுகக் கையேடு – ப. ஜெகநாதன் , ஆர். பானுமதி, க்ரியா பதிப்பகம்.

8. பெண்ணியம்: ரசிகை பார்வை உச்சியில் மிளிர்ந்த தாரகைகள் – பா.ஜீவசுந்தரி, கயல் கவின் பதிப்பகம்.

9. சிறந்த மொழிபெயர்ப்பு நூல்: தாகங்கொண்ட மீனொன்று – ஜலாலுத்தின் ரூமி, தமிழில் : என்.சத்தியமூர்த்தி, லாஸ்ட் ரெசார்ட்.

10.சிறுவர் இலக்கியம்: கிச்சா பச்சா – விழியன், வானம் பதிப்பகம்.

11. சிறப்பு விருது: நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? (பெரியார் தொகைநூல்) – பசு. கவுதமன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x