Published : 05 Aug 2017 10:52 AM
Last Updated : 05 Aug 2017 10:52 AM

எழுத்தாளர்கள் என்ன வாங்கப்போகிறார்கள்?

பொள்ளாச்சி அபி: வார, மாத இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் எழுதிவரும் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி, ‘ஆதலினால் காதலித்தேன்’ எனும் நாவலையும், ‘எங்கேயும் எப்போதும்’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவர் வாங்கத் திட்டமிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல் இது:

1. ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ - ராகுல சாங்கிருத்தியாயன் (நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக).

2. ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’.

3. ‘தாகம்’ (நாவல்) - கு.சின்னப்பபாரதி.

4. ‘செம்மீன்’ (நாவல்) - தகழி சிவசங்கரப் பிள்ளை

5. ‘உலகப்புகழ்பெற்ற மூக்கு’ (சிறுகதைத் தொகுப்பு) - வைக்கம் முகமது பஷீர்.

ஈரோடு கதிர்: பத்திரிகைகள், இணையதளங்களில் சமூகம் சார்ந்த பதிவுகளை, கட்டுரை, சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர். ‘கிளையிலிருந்து வேர் வரை’, ‘பெயரிடப்படாத புத்தகம்’, ‘உறவெனும் திரைக்கதை’ எனும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இலக்கிய மேடைகள், கல்லூரி விழாக்களில் சிறப்புப் பேச்சாளர் வரிசையில் முன்னிலையில் உள்ளவரான இவர், வாங்குவதற்காக குறித்து வைத்திருக்கும் புத்தகங்கள் இவை:

1. ‘நடராஜ் மகராஜ்’ (நாவல்) - தேவிபாரதி.

2. ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ - யுகியோ மிஷிமா.

3. ‘நீர்க்கோழி’ (சிறுகதைகள்) - ஹருகி முரகாமி கதைகள்.

4. ‘அஜ்வா’ (நாவல்) - சரவணன் சந்திரன்

5. ‘கனவு ராட்டினம்’ (நாவல்) - மாதவன் ஸ்ரீரங்கம்

வா.மணிகண்டன்: கோபியை அடுத்த கரட்டடிபாளையத்தைச் சேர்ந்தவரான எழுத்தாளர் வா.மணிகண்டன், ‘மூன்றாம் நதி’ எனும் நாவல், ‘ரோபோஜாலம்’ எனும் அறிவியல் நூல் உள்ளிட்ட 8 தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார். நிசப்தம் (nisaptham) எனும் இணையதளம் முலம், குழந்தைகளின் கல்வித்தேவை குறித்து எழுதியதன் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை கல்வி உதவித்தொகையைச் சேகரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளார். அவர் வாங்கத் திட்டமிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல் இது:

1. ‘வெட்டாட்டம்’ (நாவல்) - ஷான் கருப்புசாமி

2. வா.மு.கோமுவின் ஐந்து சிறார் புத்தகங்கள்.

3.‘முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு’ (சிறுகதைகள்) - அகரமுதல்வன்

4. ‘முகிலினி’ (நாவல்) - இரா.முருகவேள்

5. ‘மயிலு’ - கோவை சதாசிவம்.

தொகுப்பு: எஸ்.கோவிந்தராஜ், கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x